ந்தியாவில் பத்திரிகை ஊடகச் சுதந்திரம் மிக மோசமாக உள்ளதாக சர்வதேச பத்திரிகை சுதந்திரம் குறித்து கண்காணிக்கும் அமைப்புகள் உறுதி செய்துள்ளன. பத்திரிகையாளர்களும், தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் உண்மையை வெளிப்படுத்த முயலும் நபர்களும் சில ஆண்டுகளாகவே சமூக விரோதிகளால் தாக்கப்படுவது பரவலாகியுள்ளது. டி.வி. நிருபர் மோசஸின் கொலை அதை உறுதி செய்துள்ளது.

Advertisment

re

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட, பழைய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தினபத்திரிக்கை நிருபர் ஞானராஜ் ஏசுதாஸின் மகன் மோசஸ். இவர் கடந்த சில ஆண்டுகளாக தனியார் டிவி சேனலின் பகுதி நேர நிருபராக வேலை செய்துவந்தார். இந்த நிலையில் நவம்பர் 8-ஆம் தேதி இரவு அவரை வீட்டிலிருந்து பேச அழைத்து, மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு, வீட்டிலிருந்த அவர் தந்தையும், தங்கையும் வருவதற்குள், ரத்த வெள்ளத்தில் கிடந்தார் மோசஸ். அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை கொண்டு சென்றபோது, பரிசோதனை செய்த மருத்துவர் மோசஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தார்.

Advertisment

மோசஸின் தந்தை ஞானராஜ் ஏசுதாஸ், ""என் மகன் நிருபர் ஆகவேண்டுமென்ற கனவிலிருந்தவன். டி.வி.யில் நில அபகரிப்பு, கஞ்சா மாபியா கும்பல் குறித்து தொடர்ந்து செய்திகள் தந்து வந்தான். கடந்த சில மாதங்களாக எங்கள் பகுதியில் கஞ்சா போதைக்கு சிறுவர்கள் பலர் அடிமையாகி வந்தனர், சமீபத்தில் காவல்துறைக்கு கஞ்சா விற்பனை தொடர்பாக ரகசிய தகவல் களைக் கொடுத்து வந்தான்.

மோசஸ் காவல்துறைக்கு தகவல் தரும் விஷயம் சில காக்கிகள் மூலம் தெரியவர, அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகனான நவமணி சமீபத்தில் கொலை மிரட்டல் விடுத்தான். சமீபத்தில் கொலை முயற்சியும் நடந்தது. அப்போது நடந்த சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. என் மகனை வெட்டிய கொலைகாரர்கள், நிருபராக இருந்தாலும் வெட்டுவேன் என்று கூறியபடி தப்பிச்சென்றனர். புகார் கொடுத்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தால் மோசஸ் உயிருடன் இருந்திருப்பான். என் மகனுக்கு நடந்தது, இனி எந்த நிருபருக்கும் ஏற்படக்கூடாது'' என்றார் கண்ணீ ருடன்.

இதுதொடர்பாக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. நாகாராஜிடம் கேட்டோம்.“""போலீஸ் காவலில் குற்றவாளிகளை எடுத்து விசாரித்தால் தான் போலீஸ் இதில் சம்பந்தப்பட்டி ருக்கிறதா என்று தெரியும்'' என முடித்துக்கொண்டார்.

-அரவிந்த்